வியாழன், 26 ஜனவரி, 2012

.



அடுத்தவர்களின் அந்தரங்கத்தைத் தோண்டி சந்தை சரக்காக்கி காசு பார்க்கும் சேடிஸ்டு தான் நக்கீரன் கோபால் என்பது இதற்கு முன் பலதடைவ நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்தியா சுதந்திரமடைந்தப் பிறகு பத்திரிகை தர்மத்தை குழிதோண்டி புதைத்த பத்திரிகை வியாபாரிகளின் வரிசையில் இவர் முதலாமர் என்றால் மிகையாகாது.

நெற்றியில் ஒரு கண் திறக்காது என்பதை தெரிந்தே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தனது பத்திரிகையின் முகப்பில் பொய்யை எழுதி வைத்துக் கொண்டு தட்டிக்கேட்கும் மனசாட்சிக்கு திரையிட்டுக்கொண்டவர் தான் கோயபல்ஸ் கோபால்.

பத்திரிகையின் சர்குலேசன் சரியும் போதெல்லாம் அவதூறு செய்திகளை வெளியிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பி சரிந்த சர்குலோசனை நிமிர்த்துவதற்காக யாராவது ஒரு குடும்பப் பெண்ணை வம்பிக்கிழுப்பது, இஸ்லாத்தைத் தீண்டி முஸ்லீம்களை பேராட்டம் நடத்தத் தூண்டுவது, ஜனநாயக வழியில் மக்களை வழிநடத்தும் அறிஞர் பிஜே அவர்களை தீவிரவாதத்தை போதித்தார் குண்டு வைக்க ஆளனுப்பினார் என்று அவதூறு எழுதி மாட்டிக் கொண்டது என்று அவருடைய கடந்த கால அவதூறு  பட்டில் நீண்டு கொண்டே செல்லும். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய வீரியமிக்கப் போராட்டத்தினால் பத்திரிகையின் சர்குலேஷன் சரிந்து அதள பாதாளத்தில் வீழ்ந்ததிலிருந்து இஸ்லாத்தையும், பிஜே அவர்களையும் விமர்சிப்பதை நிருத்தினார்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனைக் கடிக்கவந்து மாட்டிக்கொண்ட கதையாய் தனி நபர் அந்தரங்கத்தின் மீதும், சிறுபான்மை மதத்தின் மீதும் அவதூறு எழுதிக் காசுப் பார்த்தவர் இறுதியாய் நாடாளும் முதல்வர் மீது கை வைத்து செமத்தியான சம்மட்டி அடி வாங்கிக் கொண்டார்.

கட்சிக்குள் ஜெயலலிதாவுக்கு கொ.ப.செ. பதவியைக் கொடுக்க எம்.ஜி.ஆர் முடிவெடுத்த போது அப்போதைய அதிமுக பிரமுகர்கள் அவரோ பிராமினு நாமோ பிராமினுக் கொள்கையை எதிர்க்கக் கூடிய திராவிட கட்சியினர் என்றுக் கூறி தடுக்க முயன்ற போது அதற்கு எம்.ஜி.ஆர் அம்மு ஐயர் ஆத்துப் பொண்ணு என்றாலும் பிராமினக் கொள்கைக்கு அப்பாற்பட்டவர் துனிச்லுடன் முடிவெடுக்கக் கூடிய தைரியசாலிப் பொண்ணு ஒருநாள் ஸ்பென்ஸரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி வந்து சமைத்து எனக்கும் தந்து அதுவும் ஒரு கட்டு கட்டியது என்றால் அம்முவுடைய துனிச்சலைப் பார்த்துக் கொள்ளங்களேன்  என்றுக் கூறி ஊக்கமளித்து எனக்கு கொ.ப.செ பதவியைக் கொடுத்தார் என்று ஜெயலலிதாவே அன்மையில் நடந்த பொதுக்குழுவுக்குப் பின்னர் முக்கிய நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக செய்தி வெளியிட்டு அதற்காக வாங்கி கட்டிக் கொண்டது ஆறு செக்ஷன்கள்.

506(2) கொலை மிரட்டல், 505 மனஉளைச்சலை ஏற்;படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல், 504 உயர் பதவியில் இருப்பவருக்கு களங்கம் எற்படுத்துதல், 323 கையால் தாக்குதல், 148 ஆயுதம் வைத்திருத்தல், 147 சட்ட விரோதமாகக் கூடுதல் என்று ஆறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆரியர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது ஒரு மேட்டரே அல்ல மாட்டுக்கறி சாப்பிடுவதை இந்தியாவில் அறிமுகப் படுத்தியவர்களே பண்டைய கால ஆரியர்கள் தான் அவர்களின் வேதங்கள் மாட்டுக் கறி சாப்பிடுவதை தடுக்கவில்லை மாறாக ஊக்குவிக்கிறது என்பதை அவர்களது வேத நூல்களிலிருந்தே ஏராளமான ஆதாரங்களை எடுத்துப் பட்டியலிட முடியும்.

அதனால் ஜெயலலிதா சாப்பிட்டும் கூட இருக்கலாம் அதை மேற்படி கூட்டத்தில் கூறியும் கூட இருக்கலாம் ஆனால் ஜெயலலிதா இதை மறுத்து அவதூறு என்றுக் கூறியதை அதிமுகவினர் ஏற்கும் நிலைக்கு காரணமாக அமைந்தது அவதூறுகளின் அவதாரப் புருஷன் கோபல்ஸ் கோபாலுடைய முன்னாள் அவதூறு பரப்பும் பழக்கமாகும். தொடர்ந்து பொய்யையும், அவதூறுகளையும் பரப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஒருவன் ஒரு நாள் யார் மீதான தெளிவான உண்மையைக்  கூறினாலும் மக்கள் ஏற்க மறுப்பர். அரசின் பிடியில் சிக்கிக்கொண்ட கோயபல்ஸ் கோபாலுடைய நிலையும் இன்று அவ்வாறே அமைந்திருக்கலாம்.

இனிமேலாவது தனது பத்திரிகையில் உண்மை செய்திகளை எழுதி காசு பார்க்கட்டும் அதில் காசு பார்க்க முடியவில்லை என்றால் கோடம்பாக்கம் ஸ்பெஷலாக மாற்றி காசு உண்டாகட்டும்.  


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக