புதன், 20 ஜூன், 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

 
பழமை வாதமா ? பயங்கர வாதமா  ?

மாறுகிறது பழமைவாதம்: ஸ்கூட்டியில் வலம் வரும் காஷ்மீர் இளம் பெண்கள் '' என்ற தலைப்பிட்டு மாலை மலரில் ஒரு செய்தியைப் பார்த்தோம். ஏதோ ஒரு பெரிய அதிசயம் நிகழ்ந்து விட்டதைப் போல் பில்டப் செய்து அதற்காக ஒருப் பக்கத்தையும் வீணடித்திருந்தனர் .

குடும்பங்களில் நிலவும் பழமை வாதத்தை மீற முடியாமல் பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் முடங்கி கிடந்தனர். அந்த நிலை சமீபகாலமாக கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் தனியே செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுதந்திர காற்றை உணர்வதாக அவர்கள் கூறுகின்றனர் என்று கற்பனையை கலந்து விட்டிருந்தது.

இன்றும் சென்னை, மதுரை, திருச்சிப் போன்ற பெரு நகரங்களில் வசிக்கக் கூடிய முஸ்லீம் பெண்களில் சிலர் பக்கத்தில் இருக்கக் கூடிய கல்லூரிகளுக்கோ, அலுவலகங்களுக்கோ ஸ்கூட்டியில் செல்லவே செய்கின்றனர். இதேப் போன்று பெங்களூர், பம்பாய், டெல்லிப் போன்ற மாநிலங்களின் பெரு நகரங்களிலும் இது போன்று ஸ்கூட்டியில் அத்தியாவசித் தேவைகளுக்காக செல்கின்றனர் ஆனால் நகருக்கு வெளியே தனித்து செல்ல மாட்டார்கள்.

பழமை வாதமா ? பயங்கர வாதமா ?
ஆனால் காஷ்மீரில் மட்டும் இது அறவே முடியாது காரணம் இந்திய ராணுவத்தினர் எந்த விதக் காரணமுமின்றி ஸ்கூட்டியை நிருத்தி தனித்து செல்லும் இளம் பெண்களை கடத்தி விடுவர்.

இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலுக்கு பயந்து தான் இளம் பெண்கள் தனித்து வெளியே செல்வதற்கு காஷ்மீர் குடும்பங்களில் ஏராளமானக் கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன என்பதை மாலைமலர் தெரிந்து கொள்ளட்டும்.

அவ்வாறு பல முறை கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பெண்களை மாலைமலர் போன்ற மத வாத பத்திரிகைகள் பெண் தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி மறைந்திருந்து சுட்டனர் அதனால் ராணுவ வீரர்கள் அவர்களை திருப்பி சுட்டதில் இரண்டு பெண் தீவிரவாதிகள் செத்தனர், மூன்று பெண் தீவிரவாதிகள் செத்தனர் என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு எழுதுவர்.

காஷ்மீரிலிருந்து இந்திய ஆக்ரமிப்புப் படைகள் வெளியேறி காஷ்மீர் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வரை இளம் பெண்கள் தனித்து நடந்தோ அல்லது வாகனத்திலோ பயணிக்க முடியாது.

அதனால் காஷ்மீரில் இளம் பெண்கள் ஸ்கூட்டியில் தனித்து செல்லாதது இஸ்லாமியப் 
பழமை வாதம் காரணம் அல்ல இந்திய ராணுவத்தினரின் பயங்கரவாதமேக் காரணமாகும்

பஸ்சில் செல்லும் போது ஆண்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது. ஸ்கூட்டியில் அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. என்று காஷ்மீரில் புதிதாக ஸ்கூட்டி ஓட்டும் பெண்கள் கூறுவதாக மேலும் புளுகி உள்ளது மாலைமலர்.

ஒழுக்கத்தைப் பேண வேண்டும், பாதுகாப்புடன் வாழவேண்டும் என்று கருதும் எந்தப் பெண்களும் பஸ்சில் கூட்டத்துடன் பயணிப்பதை விட ஸ்கூட்டியில் தனித்து செல்வது பாதுகாப்பு என்று ஒருக்காலும் சொல்லவே மாட்டார்கள் இது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் மாலைமலரின் அப்பட்டமான கற்பனையாகும்

பஸ்சில் பயணிக்கும் பெண்கள் அவர்களுக்கான தனி இருக்கையில் சக பெண்களுடன் அமர்ந்து செல்வர் எந்த விதமான தொந்தரவும் இடையூறும் ஆண்கள் மூலம் ஏற்படாது மீறினால் ஓட்டுனர் நடத்துனரால் அவர்கள் காவல் நியைலத்தில் பிடித்து ஒப்படைக்கப் படுவர், அல்லது சக பயணிகளால் கூட பிடித்து ஒப்படைக்கப்படலாம்.

ஸ்கூட்டியில் தனித்துப் பயணிக்கும் போது ஸ்கூட்டர் ஓட்டும் ஆண்களால் ஏற்படும் தொந்தரவுகளை, இடையூறுகளை இவர்களால் தனித்து எதிர்கொள்ள முடியாது, காவல் நிலையத்தில் பிடித்து ஒப்படைக்கவும் முடியாது.

எதோ ஒரு அவசரத் தேவைக்காகக் கூட முன்னாள் செல்லும் ஸ்கூட்டரை இவர்களால் முந்த முடியாது, முந்த நேரிட்டால் ஸ்கூட்டர் காரர் கடுப்பாகி விடுவார் ஒருப் பெண்ணுக்கு இவ்வளவுத் துணிச்சலா ? நான் யார் என்ற ஆண் அகம்பாவம் அவருக்கு வந்து விடும் இறுதியில் விபரீதத்தில் முடிந்து விடலாம் 

ஃபேஷன் ஆடைகளை அணிந்து கொண்டு தனித்து ஸ்கூட்டியில் பயணிக்கும் பெண்களின் பின்னால் அணி வகுக்கும் ண்களின் ஈவ்டீசிங்கினால் மன உலைச்சலுக்கு ஆளாக நேரிடும். 

கற்பழிப்புக்காக மரண தண்டனையே சிறந்தது என்று உலக மனித உரிமை அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் ஒருமித்துக் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு நாட்டில் கற்பழிப்புகள் மலிந்து விட்டன. இறுக்கமான ஆடை அணிய வேண்டாம் என்று நீதிபதிகள் பெண்களுக்கு அறிவுரைக் கூறும் அளவுக்கு கற்பழிப்பு வழக்குகள் நீதிமன்ற வாசல்களை நாள் தோறும் தட்டிக் கொண்டிருக்கின்றன.

தனித்து ஸ்கூட்டி ஓட்டும் எல்லாப் பெண்களும் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை மறைக்கும் ஆடை அணிந்து ஓட்டுவதில்லை என்பதற்கு மாலைமலர் கொடுத்தப் போட்டோவே இதற்கு உதாரணமாக இருக்கிறது. (தேவைக் கருதி போட்டோவையும் இணைத்துள்ளோம் இல்லை என்றால் இதுப் போன்ற போட்டோக்களை நமது மெயிலில் இணைப்பதில்லை (
 

இன்னும் திடீரென ஏற்படும் விபத்தில் அவர்களைத் தொட்டுத் தூக்கி மருத்துவமனையில் சேர்ப்பதற்கோ, இன்னும் பிற முதலுதவிகளை செய்வதற்கோ முடியாத நிலைகள் உருவாவதால் அகால மரணத்தைத் தழுவ நேரிடுகின்றனர் .

இப்படி அடுக்கடுக்காக எத்தனையோக் காரணங்களை தனித்து ஸ்கூட்டியில் செல்லும் பெண்களுக்கு ஆண்களால் ழைக்கப்படும் அநீதிகளை அடுக்கிக் கொண்டேப் போகலாம்.
 
மேற்காணும் ஆபத்தான விஷயங்களை கவனத்தில் கொண்டே பெண்கள் இரு சக்கர வாகனங்களையோ அல்லது நான்கு சக்கர வாகனங்களையோ இயக்குவதற்கு சவுதி அரேபியாப் போன்ற நாடுகளிலும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இது அவர்களுக்கு பாதுகாப்பேத் தவிறப் அவர்கள் மீது பழமை வாதத்தை திணிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

பெண்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்ப்படும் ஈவ்டீஷிங், கற்பழிப்பு, காதல் என்றப் பெயராலான  மோசடிகள் போன்ற அநீதிகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டு விட்டால் பெண்கள் தாராளமாக வாகனம் ஓட்டுவதில் தடை வராது இதை இஸ்லாம் தடை செய்யவில்ல.

நாட்டின் குடிமக்களை பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தின் மீதும் இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது அதனடிப்படையில் மேற்காணும் விதம் நாகரீகம் எனும் பெயரில் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளை கருத்தில் கொண்டே சவுதி அரேபியா அரசாங்கம் பெண்கள் வாகனம் ஒட்ட தடை விதித்துள்ளது.

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். 7138 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

வியாழன், 26 ஜனவரி, 2012

.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய விழாவில் பெண் பித்தனும்>சர்வதேச எழுத்து விபச்சாரனுமாகிய சல்மான் ருஷ்டி வந்து கலந்து கொள்ள முடியாததற்கு கொலை மிரட்டல் என்ற கரடியை அவிழ்த்து விட்டதை நம்பிய அவரைப் போன்ற ஹரி குன்ஸூரு>அமிதவ் குமார் என்ற எழுத்து வியாபாரிகள் சாத்தான் ருஷ்டி ஏற்கனவே உளறிய சாத்தானின் கவிதைகளில் சில வரிகளை அவருக்கு பதிலாக விழா ஒருங்கிணைப்பாளர் தடுத்தும் தடையை மீறி விழாமேடையில் வாசித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட சிமி போன்ற அமைப்புகள் அல்லது மும்பை நிழல் உலக தாதாக்கள் தன்னை கொலை செய்;யக்கூடும் என்று உளவுத் துறை முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்தக் காரணத்தால் தான் தன்னால் வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்று விழாவைப் புறக்கனித்தற்கான காரணத்தை சாத்தான் ருஷ்டி கூறி உள்ளார். 

ஆனால் இவரை விட இஸ்லாத்தை கீழ்தரமான நடையில் எழுதியதுடன் பெண்ணினத்தை அழிவிற்கு இழுத்துச் செல்லும் நச்சுக் கருத்துக்களை இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் பரப்பிய இஸ்லாமியப் பெயர் தாங்;கிய தஸ்லீமா நஸ்ரீன் 1994ல் வங்க தேசத்திலிருந்து விரட்டப்பட்டப் பின் உலகின் பல நாடுகளில் தங்கிவிட்டு இறுதியாக இந்தியாவுக்கு குடியேறுவதாக அறிவித்ததும் இப்பொழுது பத்திரிகைகள் இவருக்கு கிளப்பி விட்ட பீதியை விட அப்பொழுது அவருக்கும் பீதியைக் கிளப்பி விட்டன. ஆனால் அந்த அச்சுருத்தலை பொருட்படுத்தாமல் அவர் இந்தியாவுக்குள் வந்தார்.

ஒருப் பெண்ணுக்கு இருந்த துணிச்சல் கூட இந்த ஆண் தொடை நடுங்கிக்கு இருக்கவில்லை என்பது எழுத்து வியாபாரிகளுக்கு மத்தியில் மிகப் பெரிய ஒரு இழுக்காகும். இந்த பேடித் தனத்தைத் தான் மேல்படி விழாவில் அவர்கள் பேசி இருக்க வேண்டும்.

உயிரை துச்சமெனக் கருதி சர்வதேச இலக்கிய விழாவிற்கு வருகை தர மறுத்த இவரது பேடித் தனத்தை பேசுவதை விட்டு பொய்களைப் புணைந்து சாத்தானின் கவிதைகள் எனும் பெயரில் அவர் ஏற்கனவே எடுத்த வாந்தியை ஹரி குன்ஸூரு> அமிதவ் குமார் விழுங்கி விழா மேடையில் உமிழ்ந்துள்ளனர்;. 

விளம்பரமே பிரதான நோக்கம்.
சாத்தான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகளுக்குப் பிறகு அவர் எழுதிய பிற நூல்கள் அவ்வளவாக உலகச் சந்தையில் விலை போக வில்லை அதனால் மீண்டும் தன்னுடையப் புத்தகங்கள் விலை போக வேண்டும் என்பதற்காக ஜெய்ப்பூர் இலக்கிய விழா மேடையை ஹரி குன்ஸூரு> அமிதவ் குமாரைக் கொண்டு விளம்பர மேடையாக மாற்றி உள்ளார்.

விழா முடிந்தப் பின் எனக்கு எந்த கொலை மிரட்டலும் இல்லை உளவுத்துறை கூறியதாக வேண்டுமென்றே என்னை ராஜஸ்தான் அரசு பொய் சொல்லித் தடுத்து விட்டது என்று விளம்பரத்துக்காக அடுத்த அந்தர் பல்டி  அடித்தார். 

விளம்பரத்துக்காக இவர் அடித்த அந்தர் பல்டி ஆகாச பல்டியைப் பார்த்த ராஜஸ்தான் அரசு இறதியாக இவருக்கு வீடியோ கான்ஃபரன்சிங்கில் பேசக் கொடுத்த சான்ஸையும் ரத்துப் பண்ணி விட்டது.  

அவரது அடுத்தப் புத்தகம் யூத, கிறுத்தவ சந்தையில் விற்பனை சூடு பிடிக்க வேண்டும் என்பதற்காக அவரது ட்விட்டரில் மேல்படி அவரது இரு விளம்பர தாரரையும் ஆஹா! ஓஹோ! என்றுப் புகழ்ந்துத் தள்ளியதுடன் நில்லாமல் என்னை எதிர்த்து மதப் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம்களுக்குத் துணிவிருந்தால் இஸ்ரேலில் சென்றுமதப் பிரச்சாரம் செய்து பார்க்கட்டும் என்றும் விதண்டாவாதம் எழுதி உள்;ளார்.

இதையே திருப்பி நாம் அவரை கேட்கின்றோம் துணிவிருந்தால்பிரிட்டனில் இருந்து கொண்டே கிருஸ்தவமதத்தை எதிர்த்து எழுதி புத்தகத்தை விற்பனை செய்து பார்க்கட்டும். புத்தகம் விற்பனை ஆவது அடுத்ததாக இருக்கட்டும் இவர் அங்கு இருக்க முடியுமா ? என்பதை முதலாவதாக சிந்திக்கட்டும்.

கிறுத்தவ மதத்தை எதிர்த்து எழுத ஒன்றுமில்லை என்று இவரால் மனசாட்சிக்கு திரையிட்டுக் கூற முடியுமா ? அவ்வாறெனில் புரட்டட்டும் உன்னதப்பாட்டு அத்தியாயத்தை ! துணிவிருந்தால் எழுதட்டும் பைபிள் பவுலின் கவிதைகள் என்று. 

முடியாது பணத்துக்காகவும்
, படா டோப வாழ்க்கைக்காகவும் தான் பெண் பித்தனாகிய சாத்தான் ருஷ்டி பிரிட்டனில் தஞ்சம் புகுந்து மேற்காணும் ஈனச் செயலில் ஈடுபட்டு வருகிறார் என்பதை மொத்த உலகும் அறியும்.

நியாய> அநியாயம் பாராத அர்த்தமற்றப் போராட்டங்கள்.

ஒரு மருத்துவர் தாக்கப்பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த மருத்துவர்களும் கூடிக் குரலெழுப்புவது> ஒரு காவலர் தாக்கப்பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த காவலர்களும் கூடிக் குரலெழுப்புவது> ஒரு எழுத்தர் விமர்சிக்கப்;பட்டால் நியாய> அநியாயம் பாராமல் மொத்த எழுத்தர்களும் கூடிக் குரலெழுப்பும் போக்கு படித்தவர்கள் மத்தியிலும்  ஊடுருவி வருவது மிகப் பெரும் ஆபத்தானதாகும்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

.



அடுத்தவர்களின் அந்தரங்கத்தைத் தோண்டி சந்தை சரக்காக்கி காசு பார்க்கும் சேடிஸ்டு தான் நக்கீரன் கோபால் என்பது இதற்கு முன் பலதடைவ நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்தியா சுதந்திரமடைந்தப் பிறகு பத்திரிகை தர்மத்தை குழிதோண்டி புதைத்த பத்திரிகை வியாபாரிகளின் வரிசையில் இவர் முதலாமர் என்றால் மிகையாகாது.

நெற்றியில் ஒரு கண் திறக்காது என்பதை தெரிந்தே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தனது பத்திரிகையின் முகப்பில் பொய்யை எழுதி வைத்துக் கொண்டு தட்டிக்கேட்கும் மனசாட்சிக்கு திரையிட்டுக்கொண்டவர் தான் கோயபல்ஸ் கோபால்.

பத்திரிகையின் சர்குலேசன் சரியும் போதெல்லாம் அவதூறு செய்திகளை வெளியிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பி சரிந்த சர்குலோசனை நிமிர்த்துவதற்காக யாராவது ஒரு குடும்பப் பெண்ணை வம்பிக்கிழுப்பது, இஸ்லாத்தைத் தீண்டி முஸ்லீம்களை பேராட்டம் நடத்தத் தூண்டுவது, ஜனநாயக வழியில் மக்களை வழிநடத்தும் அறிஞர் பிஜே அவர்களை தீவிரவாதத்தை போதித்தார் குண்டு வைக்க ஆளனுப்பினார் என்று அவதூறு எழுதி மாட்டிக் கொண்டது என்று அவருடைய கடந்த கால அவதூறு  பட்டில் நீண்டு கொண்டே செல்லும். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய வீரியமிக்கப் போராட்டத்தினால் பத்திரிகையின் சர்குலேஷன் சரிந்து அதள பாதாளத்தில் வீழ்ந்ததிலிருந்து இஸ்லாத்தையும், பிஜே அவர்களையும் விமர்சிப்பதை நிருத்தினார்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனைக் கடிக்கவந்து மாட்டிக்கொண்ட கதையாய் தனி நபர் அந்தரங்கத்தின் மீதும், சிறுபான்மை மதத்தின் மீதும் அவதூறு எழுதிக் காசுப் பார்த்தவர் இறுதியாய் நாடாளும் முதல்வர் மீது கை வைத்து செமத்தியான சம்மட்டி அடி வாங்கிக் கொண்டார்.

கட்சிக்குள் ஜெயலலிதாவுக்கு கொ.ப.செ. பதவியைக் கொடுக்க எம்.ஜி.ஆர் முடிவெடுத்த போது அப்போதைய அதிமுக பிரமுகர்கள் அவரோ பிராமினு நாமோ பிராமினுக் கொள்கையை எதிர்க்கக் கூடிய திராவிட கட்சியினர் என்றுக் கூறி தடுக்க முயன்ற போது அதற்கு எம்.ஜி.ஆர் அம்மு ஐயர் ஆத்துப் பொண்ணு என்றாலும் பிராமினக் கொள்கைக்கு அப்பாற்பட்டவர் துனிச்லுடன் முடிவெடுக்கக் கூடிய தைரியசாலிப் பொண்ணு ஒருநாள் ஸ்பென்ஸரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி வந்து சமைத்து எனக்கும் தந்து அதுவும் ஒரு கட்டு கட்டியது என்றால் அம்முவுடைய துனிச்சலைப் பார்த்துக் கொள்ளங்களேன்  என்றுக் கூறி ஊக்கமளித்து எனக்கு கொ.ப.செ பதவியைக் கொடுத்தார் என்று ஜெயலலிதாவே அன்மையில் நடந்த பொதுக்குழுவுக்குப் பின்னர் முக்கிய நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக செய்தி வெளியிட்டு அதற்காக வாங்கி கட்டிக் கொண்டது ஆறு செக்ஷன்கள்.

506(2) கொலை மிரட்டல், 505 மனஉளைச்சலை ஏற்;படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல், 504 உயர் பதவியில் இருப்பவருக்கு களங்கம் எற்படுத்துதல், 323 கையால் தாக்குதல், 148 ஆயுதம் வைத்திருத்தல், 147 சட்ட விரோதமாகக் கூடுதல் என்று ஆறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆரியர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது ஒரு மேட்டரே அல்ல மாட்டுக்கறி சாப்பிடுவதை இந்தியாவில் அறிமுகப் படுத்தியவர்களே பண்டைய கால ஆரியர்கள் தான் அவர்களின் வேதங்கள் மாட்டுக் கறி சாப்பிடுவதை தடுக்கவில்லை மாறாக ஊக்குவிக்கிறது என்பதை அவர்களது வேத நூல்களிலிருந்தே ஏராளமான ஆதாரங்களை எடுத்துப் பட்டியலிட முடியும்.

அதனால் ஜெயலலிதா சாப்பிட்டும் கூட இருக்கலாம் அதை மேற்படி கூட்டத்தில் கூறியும் கூட இருக்கலாம் ஆனால் ஜெயலலிதா இதை மறுத்து அவதூறு என்றுக் கூறியதை அதிமுகவினர் ஏற்கும் நிலைக்கு காரணமாக அமைந்தது அவதூறுகளின் அவதாரப் புருஷன் கோபல்ஸ் கோபாலுடைய முன்னாள் அவதூறு பரப்பும் பழக்கமாகும். தொடர்ந்து பொய்யையும், அவதூறுகளையும் பரப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஒருவன் ஒரு நாள் யார் மீதான தெளிவான உண்மையைக்  கூறினாலும் மக்கள் ஏற்க மறுப்பர். அரசின் பிடியில் சிக்கிக்கொண்ட கோயபல்ஸ் கோபாலுடைய நிலையும் இன்று அவ்வாறே அமைந்திருக்கலாம்.

இனிமேலாவது தனது பத்திரிகையில் உண்மை செய்திகளை எழுதி காசு பார்க்கட்டும் அதில் காசு பார்க்க முடியவில்லை என்றால் கோடம்பாக்கம் ஸ்பெஷலாக மாற்றி காசு உண்டாகட்டும்.  


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்